ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.. 12 பேர் பலி

by Staff / 06-12-2023 11:33:08am
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.. 12 பேர் பலி

மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டில் சமீபத்தில் கோர விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 60 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

 

Tags :

Share via