பொன்னியின் செல்வன் திரைப்பட ஆடியோ-ட்ரைலர் வெளியீடு

கல்கியின் வரலாற்றுப் புதினத்தில் குறிப்பிடத்தக்க படைப்பு பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனை மையப்படுத்திசோழர்குல பெருமைகளை வீரத்தை பறைசாற்றும் கதை..குந்தவை, வந்திய தேவன் பாத்திர வார்ப்பு படிப்போரை கொள்ளை கொள்ளும் .கல்கியின் எளிமையான நடையிலமைந்த கதை...ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாசிக்கத் தெரிந்த ,இலக்கிய சுவையுடையோர் அனைவரும் வாசிக்கத் தவறியிருக்க மாட்டார்கள் . அத்தனை கற்பனை நயத்துடன் புனையப்பட்ட நாவலை .,மணிரத்னம் பல ஆண்டுகளாக பல சிரமங்களை கடந்து அற்புதமாக உருவாக்கியுள்ளார் .அதன்ஆடியோ-ட்ரைலர் வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. லைகாநிறுவனம் தயாரிப்பு.விக்ரம்,கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 30 ந்தேதி ,தமிழ்,தெலுங்கு.,மலையாளம், கன்னடம், இந்தியில் வெளியாகிறது

Tags :