வெள்ளத்தில் மூழ்கி 8 பேர் பலி.

by Admin / 20-11-2021 08:20:56pm
வெள்ளத்தில் மூழ்கி 8 பேர் பலி.

 

ஆந்திராவில் அணை உடைந்து தண்ணீர் வெளியேறியதில் 2 அரசு பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கி 8 பேர் பலி
ஆந்திர மாநிலத்தின் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல பகுதிகளில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மக்கள் தத்தளித்து வருகின்றனர். கடப்பா மாவட்டம் ராஜாம்பேட்டை அருகே கடந்த 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அன்னமய்யா அணையில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அணை உடைந்து தண்ணீர் வெளியேறியுள்ளது. அணையில் இருந்து  வெளியேறிய வெள்ள நீர் அப்பகுதி முழுவதையும் மூழ்கடித்த நிலையில் அவ்வழியாக பயணிகளை கொண்டு சென்றுக் கொண்டிருந்த 2 அரசு பேருந்துகளும் நீரில் மூழ்கியுள்ளது.பேருந்து நீரில் மூழ்கியதில் பயணம் செய்த 8 பேர் பலியாகியுள்ளனர். 20 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 50 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo