தயாரிப்பை நிறுத்துகிறது ‘போர்டு’ நிறுவனம்
டாடா, மாருதி, ஹூண்டாய் போன்ற தயாரிப்பு நிறுவனங்களில் குறைந்த விலை கார்கள் அப்போதும், இப்போதும் ஓரளவு விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் ரூ.7 லட்சத்தையும் விட, விலை உயர்வான சொகுசு கார்களின் விற்பனை தான் மந்தமாகிவிட்டது.
போர்டு, போஸ்வேகன் முதலிய கார்களின் ஆரம்ப விலையே ரூ. 8 லட்சமாக இருக்கிறது. ஆகவே அவர்களால் தங்களது உயர் தொழில்நுட்ப கார்களை நம் நாட்டில் சந்தைப்படுத்த முடியாமல் திணறுவதும் புரிகிறது.
நகரங்களில் பெரிய கார்களை நிறுத்த சாலை வசதிகள் உரிய வகையில் கிடையாது. பெரிய குடியிருப்புகளில் வீட்டிற்கு ஒரு கார் நிறுத்தம் கொடுத்தாலும், சமீபமாக கார், ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி பெருவாரியான இல்லங்களில் குறைந்தபட்சம் 2 கார் இருப்பதாகத் தெரிய வருகிறது.அலுவலகம் மட்டும் சென்று வர ஒரு காரும், பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்துச் சென்று வர ‘எஸ்யுவி’ ரக கார்களும் நகரங்களில் பிரபலமாக இருக்கிறது.2019வாக்கிலேயே சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி வாகன டீலர்கள், பழுது பார்க்கும் வளாகங்கள் மூடப்பட்டும் வருகிறது.
கொரோனா பெரும் தொற்று நாடெங்கும் ஊரடங்கை ஏற்படுத்தி எல்லாவித தயாரிப்பு தொழிற்சாலைகளையும் மாதக் கணக்கில் மூடும்படி செய்தது. கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மூடப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளத் தொகையை தந்துவிட்டு இனி வேலைக்கும் வரவேண்டாம் என்று கூறிவிட்டனர்அதே நிலை போர்டு கார் தயாரிப்பு மையத்திலும் இருந்து இருக்கிறது. கடந்த ஆண்டே பல பொறியியல் வல்லுநர்களை பணியிடை நீக்கம் செய்து விட்டனர். 5000 ஊழியர்களுக்கு சென்ற வாரம் தரப்பட்ட சம்பளக் கவருடன் ஒரு வருட பணி ஒப்பந்தம் மட்டுமே என்ற கடிதமும் தரப்பட்டுள்ளது.போர்டு கார் தயாரிப்புக்கு தரப்பட்டிருக்கும் நிலம் தமிழக அரசால் இலவசமாக தரப்பட்டது. டிட்கோ அமைப்பின் கூட்டு தொழில்முறையில் நடைபெற்று வருகிறது. ஆகவே முதல்வர் ஸ்டாலின் இப்படி ஒரு துறையே மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி இருப்பதை உணர்ந்து அதன் சீரமைப்புக்கு நல்ல விடையை தேட வேண்டும்.
Tags :