குற்றாலத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம்.

by Editor / 10-08-2024 09:45:47am
குற்றாலத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம்.

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. மேலும் குடியிருப்பு காசிமேஜர்புரம் வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவருக்கு வாழ்வாதாரம் தரும் தேவார ஸ்தலம் ஆகும் வணிகம் நிறைந்த பகுதி ஆகும் குற்றாலம் விளங்கி வருகிறது 

இந்நிலையில் குற்றாலம் பகுதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குற்றாலநாதர் கோவில் நிர்வாகத்திற்கு கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த கடைகளின் வாடகை பாக்கி பல கோடி ரூபாய் வரை உள்ளதாக கூறப்படுகின்றது புதியதாக பொறுப்பேற்ற அதிகாரி பல்வேறு விதிமுறைகளை வகுத்து ஆலயத்திற்கு கடைக்காரர்கள் செலுத்த வேண்டிய பாக்கியத்தை கெடுபிடி ஆக வசூல் செய்து ஆலயத்தின் உடைய வருவாயை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இதன் தொடர்ச்சியாக கடை உரிமையாளர்கள் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக அளவில் வாடகை வருமானத்தை ஈட்டுவதாக தெரிய வரவே இது தொடர்பான பிரச்சனை அவ்வப்போது வியாபாரிகளுக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் இடையே எழுந்து வந்த நிலையில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது வியாபாரிகள் வாடகை நிலுவையை முழுவதும் செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில் கடை உரிமை சுவாதீன ரசீது ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பை ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ளது குற்றாலநாதர் ஆலயத்தின் உடைய இந்த அறிவிப்பை எதிர்த்து, வாரிசுதாரர்களை வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்பது அம்ச குறைகளை ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெயின் அருவி பகுதியில் அமைந்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் உணவுக்காக தென்காசி செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags : குற்றாலத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம்.

Share via