அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

by Staff / 04-09-2023 01:43:50pm
அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 18ம் தேதி கும்பல் ஒன்று சுரேசை வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதிமுக பிரமுகர்களான சுதாகர் மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட, ஜான் கென்னடியே, நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via
Logo