பயிர்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி - தமிழ் விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி - தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் பாசிப்பயிறு உளுந்தம் பயிரை தரையில் கொட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையாபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையின் காரணமாக விவசாயிகள் பயிர் செய்த உளுந்து, பாசிப்பயிர் ,மக்காச்சோளம், மிளகாய், பருத்தி, உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் சேதம் அடைந்ததாகவும் இதற்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் பாசிப்பயிறு உளுந்தம் பயிரை தரையில் கொட்டி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தோணுகால் பஞ்சாயத்து தலைவர் சீனி ஏற்பாட்டில் தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்ஏக்கர் ஒன்றுக்கு முதற்கட்டமாக 10000 வழங்க வேண்டும் என்றும் அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரணம் தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவும், ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும்,எனவே அரசு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் மழை வெள்ளத்தால் உயிரிழந்த ஆடு மாடுகளுக்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் சேதம் அடைந்த பயிர்களை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை கோட்டாட்சியரிடம் காண்பித்து கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என முறையிட்டு மனு அளித்தனர்.இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோவிங்களை எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை மனுவினை கோட்டாச்சியர் ஜேன் கிருஸ்டி பாயிடம் வழங்கினர்.

Tags :