சென்னை திரும்பும் பயணிகளுக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் 

by Editor / 03-11-2024 12:29:34pm
சென்னை திரும்பும் பயணிகளுக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் 

தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவு பெற்றதை ஒட்டி மக்கள் தங்கள் வேலை பார்க்கும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் முக்கிய சாலைகள் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது.சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட  சென்றவர்கள் விடுமுறை தினம் இன்றுடன் நிறைவடைவதால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றுமுதல் பேருந்துக்குள் மற்றும் ரயில்கள் மூலம்  சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் சென்னை திரும்ப வாய்ப்பிருப்பதால் பயணிகளின் வசதிக்காக நாளை (நவ.4) தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காட்டாங்குளத்தூரில் இருந்து நாளை (நவ.4) அதிகாலை 4, 4.30, 5, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.இந்த ரயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அதே போல, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கு 2 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.இவ்வாறு  அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சென்னை திரும்பும் பயணிகளுக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் 

Share via