ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் இபிஎஸ் முன்னிலையில் ஐக்கியம்

by Staff / 22-02-2023 03:20:58pm
ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் இபிஎஸ் முன்னிலையில் ஐக்கியம்

ஈரோடு மாவட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி நிர்வாகிகள் விலகி, சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுக இபிஎஸ் அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், தனிப்பட்ட சில காரணங்களால் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகியுள்ளார். மேலும், ஓபிஎஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவதாகவும், ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்த முடியாதவர் கட்சியை எப்படி நடத்துவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories