பசும்பொன்னில் மண்டபம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Staff / 28-10-2023 04:47:18pm
பசும்பொன்னில் மண்டபம் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிட முகப்பில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் வகையில் மற்றொரு மண்டபமும் அமைக்கப்படும். ரூ.1.42 கோடி மதிப்பில் மண்டபங்கள் அமைக்கப்படும். தேவர் ஜெயந்தியின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். வரும் 30ஆம் தேதி பசும்பொன்னில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories