தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மே 7ஆம் தேதி வியாழக்கிழமை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

by Admin / 05-05-2026 04:31:36pm
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மே 7ஆம் தேதி வியாழக்கிழமை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மே 7ஆம் தேதி வியாழக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.  50 ஆண்டுகளுக்கு  மேலாக ஆண்ட திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மூன்று ஆண்டுகளுக்குள் தோன்றிய ஒரு கட்சி 34.92% வாக்குகளை பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக அமைய உள்ள அமைச்சர் அவையில் கட்சியின் பொதுச் செயலாளர்  என். ஆனந்த்,  ஆதவ் அர்ஜுனா,  செங்கோட்டையன்,  நிர்மல் குமார் உட்பட பலர்  அமைச்சரவையில் இடம்பெறக் கூடும்  என்கிற  தகவல் வெளியாகி உள்ளது. அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு பத்துக்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால் விஜய்  பட்டினப்பாக்க முகாம் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via
Logo