பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
சூப்பர் குட்ஸ் என்னும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி புது வசந்தம் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி ராஜஸ்தான் மாநிலம் உதய போரில் கார் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். சூப்பர் குட்ஸ் நிறுவனத்தின் வழியாக தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படம் தயாரித்து உள்ளார். பிலிம்பேர் விருதையும் மூன்று முறை பெற்றுள்ளார். பூவே உனக்காக, நாட்டாமை சூரியவம்சம், பூவே உனக்காக, கேப்டன் ,சேரன் பாண்டியன், புரியாத புதிர் ,சுந்தர புருஷன் துள்ளாத மனமும் துள்ளும் ,கண்ணுபட போகுதய்யா, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், ஷாஜகான், மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல்வேறு வெற்றிகரமான படங்களை தயாரித்தவர். பல இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர். இவருடைய மகன் ஜீவா ஒரு நடிகர் சித்தன் என்னும் படத்தில் நடித்த இன்னொரு மகன் ரமேஷ். சமீபகாலம் வரை பல்வேறு படங்களை தயாரித்து வந்தவர் இன்று விபத்தில் காரணமாக உயிரிழந்தார்.
Tags :














.jpg)



