காவிரி விவகாரம் - ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்: பிரேமலதா

கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்து கட்சியையும் கூட்டி தமிழ்நாடு விவசாயிகள் நலனை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Tags :