"தலையைத் திருப்பவில்லையெனில், தோட்டா என் மூளையைத் துளைத்திருக்கும்"

by Staff / 15-07-2024 03:37:28pm

நான் சரியான நேரத்தில், சரியான முறையில் தலையைத் திருப்பினேன். இல்லையெனில், தோட்டா என் மூளையைத் துளைத்திருக்கும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு ஊடகத்திற்கு அளித்த முதல் பேட்டியில் ட்ரம்ப், 'கடவுளாலோ அல்லது அதிர்ஷ்டத்தாலோதான் நான் உயிர் பிழைத்தேன். AR-15 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததாக யாரையும் இதுவரை கண்டதில்லை என எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறினார். ரகசிய சேவை ஏஜென்ட்கள் நல்லதொரு வேலையைச் செய்தனர்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via