விக்ரம் இன்று காலைக்காட்சியிலிருந்து ரசிகர்களுக்கான கொண்டாட்டம்

by Admin / 03-06-2022 08:03:00am
 விக்ரம் இன்று காலைக்காட்சியிலிருந்து ரசிகர்களுக்கான கொண்டாட்டம்

உலகம் முழுதும் ரசிகர்களைப்பெற்ற கமல் ஹாசனின் விக்ரம் பான் இந்தியா திரைப்படமாக வெளி வருகிறது.தமிழ்,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கோலோச்சிய நடிகர் கமல்ஹாசன். ஏற்கனவே,80 களில் வெளி வந்த விக்ரம்  எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து  அறிவியல் தொழில் நுட்டபத்தை முதன்முதலில்புகுத்தி  வெளியிட்ட திரைப்படம் .அப்போதே பெரும் செலவில் எடுத்திருந்தார், கமல். ஆனால்,படம் எதிர்பார்த்த வெற்றியைத்தர வில்லை.அதற்குக்காரணம் இன்றைய தொழில் நுட்ப அறிவைஅன்றை ரசிகர்கள் பெறக்கூடியசூழல் இல்லாததே. திரைப்படத்தில் பரிச்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதில் கமல்  ஒரு முன்னோடி.ஆரம்ப காலத்தில், ரஜினி வளர்ந்து வரும் தருணத்தில் பல படங்கள் இணைந்து நடத்தனர். இருவரும் பிருமாண்ட நாயகர்களாக உருவான பின்பு ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை.ஆனால்,இன்றைய விக்ரமில்  அவரைப்பார்த்து வளர்ந்த இன்றைய முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி,சூர்யா போன்ற நடிகர்களும் அவரோடு இணைந்துள்ளனர்.தனித்து அவரது ரசிகர்கள் என்கிற எல்லை தாண்டி திரையுலகம் பயணிக்க ஆரம்பித்துள்ளதை கமல் ஹாசன் நன்கு அறிந்துள்ளார்..புதி விக்ரமில் கமலின் திறமை என்ன? என்பது காலை புலப்படும.
 

Tags :

Share via