ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 27ல் வேலை நிறுத்தம்.

by Editor / 09-06-2022 09:10:56am
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள்  27ல்  வேலை நிறுத்தம்.

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 27ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு உள்ளிட்ட ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் ஆகிய சங்கங்கள் பங்கேற்க உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க இருப்பதாககூறப்ப்டுகிறது.இதனால் வருகிற ஜூன் 27ஆம் தேதி வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Tags : 27 public sector bank employees on strike.

Share via

More stories