பாரில் தீப்பெட்டி தரமறுத்த வாலிபர் குத்திக்கொலை

by Staff / 08-07-2025 03:27:09pm
பாரில் தீப்பெட்டி தரமறுத்த வாலிபர் குத்திக்கொலை


கோயம்புத்தூர்: போடிபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் (28) தனது நண்பர்களுடன் டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றிருந்தார். அங்கு முகமது ஹாரூன் என்பவர் சிகரெட் புகைக்க தீப்பெட்டி கேட்டதற்கு ஜெயக்குமார் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜூலை 7) அதிகாலை, ஜெயக்குமாரை ஹாரூன் மற்றும் விக்கி (விக்ரம்) ஆகியோர் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது உயிரிழந்தார். இதையடுத்து, ஹாரூன் மற்றும் விக்கியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via