உதயநிதி பேசியது அரசியலமைக்கு விரோதமானது நீதிமன்றத்தில் வாதம்

by Staff / 12-10-2023 12:23:01pm
உதயநிதி பேசியது அரசியலமைக்கு விரோதமானது நீதிமன்றத்தில் வாதம்

சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமசஎ உதயநிதி ஸ்டாலின், சனாதானம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும், அதை ஒழிக்க வேண்டுமென்றும் பேசியுள்ளார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P. K. சேகர்பாபுவும் பங்கேற்றுள்ளார். இதனைதொடர்ந்து திமுக எம். பி ஆ. ராசாவும் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகிறார். இந்த நிலையில், இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் கோவாரண்டோ மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் உதயநிதியின் பேச்சு அடங்கிய பென் டிரைவ் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் T. V. ராமானுஜம், மதச்சார்பற்றவராக இருக்க வேண்டிய அமைச்சர், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும், மத சுதந்திரத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி எனவும் குறிப்பிட்டார். மேலும், பதவிப்பிரமாண உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் மீறும் வகையில் செயல்பட்ட அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யலாம் எனவும் வாதிட்டார்.

 

Tags :

Share via