அறிஞர் அண்ணா பாணியில் பேசிய மு.க.ஸ்டாலின்

by Staff / 15-09-2023 03:54:33pm
அறிஞர் அண்ணா பாணியில் பேசிய மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், “மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள்” என அறிஞர் அண்ணா பாணியில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி உங்களது கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo