தென்காசி 11 பவுன் நகைக்காக கள்ளக்காதலியைகொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை.

by Staff / 09-09-2025 09:35:18pm
தென்காசி 11 பவுன் நகைக்காக கள்ளக்காதலியைகொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்கை பகுதிக்கு உட்பட்ட நெற்கட்டும்செவல் பகுதியில் கடந்த 2013-ஆம் வருடம் சாக்கு மூட்டை ஒன்றில் ரத்த கரையுடன் துர்நாற்றம் வீசியபடி ஏதோ ஒற்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் விரைந்து சென்று அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர்.அப்போது, அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் அந்த சாக்கு முட்டையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது, அந்த பெண் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது மனைவியான வள்ளித்தாய் (எ) வசந்தா (வயது 25) என்பது தெரிய வந்தது.அதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் போது, வசந்தாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டராஜா என்ற நபருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்த நிலையில், மணிகண்டராஜா,  வசந்தாவின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 11 பவுன் நகைக்காக அவரை தனியாக வரச் சொல்லி, வசந்தாவை கத்தியால் குத்தி கொலை செய்து அவரது நகையை பறித்து, வசந்தாவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி நெற்கட்டும்செவல் பகுதியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, மணிகண்ட ராஜாவை கைது போலீசார் அவரை சிறையில் அடைத்த நிலையில், இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவு பெற்று இன்றைய தினம் தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேல் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அப்பொழுது, நகைக்காக கள்ளகாதலியை கொலை செய்த மணிகண்டராஜாவுக்கு ஆயுள் தண்டனை  விதித்ததோடு மட்டுமல்லாமல், கூடுதலாக ரூ.3000 அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 11 பவுன் நகைக்காக கள்ளக்காதலியைகொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை.

Share via
Logo