வேலூரில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் காயம்

by Editor / 13-03-2025 12:37:43pm
வேலூரில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் காயம்

வேலூரில் நண்பர்களுக்குள் நிதி வசூல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கம்பி குத்தியதாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டுகளை அகற்றிய மருத்துவர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via