14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

by Staff / 23-10-2022 12:11:06pm
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

மகாராஷ்டிரா: நாக்பூர் மாவட்டம் அஜின் பகுதியில் 52 வயது டியூசன் ஆசிரியர் கடந்த 11-ம் தேதி தன்னிடம் டியூசன் பயின்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் டியூசனுக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். டியூசனுக்கு செல்லாமல் நின்றது குறித்து சிறுமியிடம் அவரின் தாய் கேட்ட போது உண்மை தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், நேற்று போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories