விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

by Editor / 02-06-2024 09:12:05am
 விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்எம்சிஏ கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இமெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடங்களில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது புரளி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :  விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

Share via

More stories

Logo