தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நடைபயிற்சியின்பொழுது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதனை அடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளும் பொருட்டு இரண்டு நாள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்த அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.அதனால் அவருடைய இரண்டு நாள் சுற்றுப்பயணம் நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இன்று முதலமைச்சர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்.
Tags :