கன்னட வெறியர்கள் போல் நாங்கள் செய்தால் என்ன ஆகும்

by Staff / 29-09-2023 03:46:42pm
கன்னட வெறியர்கள் போல் நாங்கள் செய்தால் என்ன ஆகும்

நடிகர் சித்தார்த் மீது கன்னட இன வெறியர்கள் அத்துமீறலில் ஈடுபட்டது போல் இதையே நாங்களும் செய்தால் என்ன ஆகும்? என நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவருமான கருணாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். கர்நாடகாவிற்கு செல்லும் தமிழர்களை அடிப்பது, தமிழ்த்திரைப்படத்துறையினரை தடுப்பது என்று கன்னட இன வெளியை கக்குகின்றனர். இதே நிலை இனியும் நீடித்தால் தமிழர்களும் அவ்வாறே செய்வார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடிகர் சித்தார்த்தை அவமானப்படுத்தும் நோக்கில் நடந்துகொண்ட கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது உடனடியாக கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo