சீமான் உருவ பொம்மை எரித்து போராட்டம்.

by Editor / 30-01-2025 03:30:48pm
சீமான் உருவ பொம்மை எரித்து  போராட்டம்.

மதுரை ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திருவள்ளுவர் சிலை அருகே  பெரியாரை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமானுக்கு  கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடைப்பெற்றது.

திராவிடர் பெரியார் கழக  தலைவர் மணி அமுதன் தலைமையில் உருவ பொம்மை இருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததால் ஆட்சியர் அலுவலக சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் உருவபொம்மையை பறித்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
 

 

Tags : சீமான் உருவ பொம்மை எரித்து போராட்டம்

Share via

More stories