ஜல்லிகட்டுபோட்டி: மாவட்ட நிர்வாகம் நடத்த உத்தரவு

by Staff / 20-12-2023 03:22:32pm
ஜல்லிகட்டுபோட்டி: மாவட்ட நிர்வாகம் நடத்த உத்தரவு

மதுரை மாவட்ட நிர்வாகத்திடம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள்தான் நடத்துவோம் என பல தரப்பினர் முறையிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகமே இணைந்து நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டில் எவ்வித சாதி, மதத்தையும் புகுத்த வேண்டாம் என கூறி உத்தரவிட்டனர். முன்னதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தென்கால் பாசன விவசாயிகளின் சங்க நிர்வாகிகள் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via