பிரதமர்நரேந்திர மோடி என்று செஷல்ஸில் -மொரிசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் கூலமுடன் சந்திப்பை மேற்கொண்டார்.
பிரதமர்நரேந்திர மோடி என்று செஷல்ஸில் -மொரிசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் கூலமுடன் சந்திப்பை மேற்கொண்டார். செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்திருந்த நிலையில் ,இன்று அவர்களுடைய சந்திப்பில் இந்தியா மொரிசியஸ் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததோடு மேம்படுத்தப்பட்ட உத்திசார் கூட்டான்மையின் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்தும் சிறப்பு பொருளாதாரத் தொகுப்பின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் திறன் மேம்பாடு ,திறன் வளர்ப்பு ,பாதுகாப்பு, எரிசக்தி, இணைய பாதுகாப்பு மற்றும் பல துறைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.அங்கு நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றத்திற்கு மிகக் குறைந்த பங்களிப்பைச் செய்தவர்கள் அதன் விளைவுகளின் பெரும் சுமைகளை சுமக்க கூடாது என்றும் பருவநிலை நடவடிக்கையானது நேர்மை பொறுப்பு மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் சிறிய தீவு வளரும் நாடுகளின் கவலைகளுக்கு உரிய கவனம் கிடைப்பதை இந்தியா எப்போதும் உறுதி செய்யும் என்றும் ஒரு பெரிய கடல் நாடாகும் என்றும் நீல பொருளாதாரம் நிலைத்தன்மை மற்றும் பல பிற துறைகளில் அதன் முன்னேற்றம் மிகவும் ஊக்கம் அளிப்பதாகவும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தை இந்தியாவும் செஷல்சும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார். அந்நாட்டின் சிறப்பு விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
Tags :


















