அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக -அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 28-06-2026 11:05:31pm
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக -அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,708 காலி பணியிடங்களை நிரப்பு நடத்தப்பட்ட தேர்வு முடிவு ஜூன் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அரசு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உள்ளதோடு ஆப்ஜெக்டிவ் டைப் முதல் தாளில் 150 க்கு 111 மதிப்பெண்கள் எடுத்த தகுதி வாய்ந்த தமிழ் துறை தேர்வு ஒருவருக்கு விளக்க கட்டுரை தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கொள்குறி வகை தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சில தேர்வுகளுக்கு விளக்கக் கட்டுரை தாளில் 50 க்கு 49 மதிப்பெண்கள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரே தேர்வில் 100க்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர் கட்டுரையில் பூஜ்ஜியம் பெறுவது மதிப்பீட்டு முறையில் வெளிப்படை தன்மையற்ற ஒரு நிலை உருவாகி உள்ளதாகவும் அதனால் தகுதியான தேர்வுகளை புறக்கணித்துவிட்டு குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சாதகமாக வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்  தேர்வு முறைகேடு புகார்கள் குறித்து ஒரு விரிவான சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்வு மதிப்பீடுகளில் முறையேற்று நடந்த அதிகாரிகள் மற்றும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo