,எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் திமுகவினர் 100 விழுக்காடு தயாராக இருக்க வேண்டும் - திமுக தலைவர் மு. க .ஸ்டாலின்
இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா, பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட அதிமுகவினர் இணைந்தனர். இவ்விழாவில் பேசிய திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் ,எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் திமுகவினர் 100 விழுக்காடு தயாராக இருக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழக அரசு தனி பெரும்பான்மை இன்றி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகவும் தற்போதைய அரசு எப்பொழுது வேண்டுமானாலும்கவிழலாம் என்றும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் கூட இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாகவும் புதிய ஆட்சி அமைந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாட்டில் மின்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதை பொருள் விளக்கம் என தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதாகவும் தற்போதைய அரசுக்கு ஓட்டு போட்டவர்களும் ஓட்டு போடாதவர்களும் ஒரு சேர கவலைப்படும் நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவித்த அவர் திமுக ஒருபோதும் தோல்விகளை கண்டு தொய்வடையாது என்றும் தமிழ்நாட்டை சீரழிய விடாமல் பாதுகாக்கும் கடமை திமுகவுக்கு மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags :


















