எல்லை பாதுகாப்பு  படையில்  பணியாற்றிவந்த வீரர் பலி-

by Editor / 09-01-2023 10:42:19pm
எல்லை பாதுகாப்பு  படையில்  பணியாற்றிவந்த வீரர் பலி-

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த சதீஸ் என்கிற ததேயுஸ் எல்லை பாதுகாப்பு  படை பிரிவில் திரிபுராவில் பணிபுரிந்து வந்த நிலையில் அங்கு நடைப்பெற்று வந்த சாலை பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளின் பாதுகாப்புக்காக வாகனத்தில் செல்கையில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வீர மரணம் அடைந்தார்.அவர் உடல் இன்று குமரி மாவட்டத்தில் சொந்த ஊரில்  பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உரிய ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க  இறுதி மரியாதை செய்யப்பட்டு  நல்லடக்கம் செய்யப்பட்டது. சோகத்தில் மூழ்கிய ராணுவ வீரரின் கிராமம்.
 

 

Tags :

Share via

More stories

Logo