ஜம்மு காஷ்மீருக்கு மேலும் 2 ஆயிரம் வீரர்கள்
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து பொதுமக்கள் படுகொலைகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. கூடுதலாக 2,000 வீரர்களுடன் 20 கம்பெனி துணை ராணுவப் படைகளை அனுப்புவதாக சிஆர்பிஎஃப் அறிவித்துள்ளது. இந்த வீரர்கள் குழு ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்முவில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறையினர் எச்சரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
Tags :