மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்றதாக எழுந்த புகார் 30 பேரிடம் தீவிர விசாரணை

by Staff / 26-05-2022 04:45:23pm
மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்றதாக எழுந்த புகார் 30 பேரிடம் தீவிர விசாரணை

மதுரை ஆவினில் 2020-- 21 ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற 30 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆண்டில் நடைபெற்ற மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் அதுகுறித்து ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ஆவின் துணை பதிவாளர் கணேசன் ஆகியோர் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு இருந்தனர். முக்கிய ஆவணங்கள் கிடைக்காததால் கூறப்படும் நிலையில் சம்மன் அனுப்பப்பட்டது பெயரில் ஆவணங்களுடன் இன்று ஆஜராகி உள்ள பணி நியமனம் பெற்ற  30 பேரிடம் ஆவின் துணை பதிவாளர் கணேசன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo