அன்னதானத்தின் போது நரிக்குறவர்கள் தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கியதாக புகார் இருவர் பணியிடை நீக்கம்
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் அன்னதானத்தின் போது நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோவில் செயலாளரும் சமையளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இக்கோவிலில் கடந்த ஆண்டு சாப்பிட வந்த நரிகுறவர் பெண் விரட்டி அடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்க உத்தரவிட நிலையில் மீண்டும் நரிக்குறவர்களை தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கப் படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கோவில்செயல் அலுவலர் சிவ சண்முகம பொன்னியயும் சமையலர் குமாரியையும் பணியிடை நீக்கம் செய்து அறநிலை துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
Tags :