முன்னாள் ஸ்டுடியோ உரிமையாளர் விஜயராமன் கைது

by Editor / 12-06-2022 03:36:39pm
முன்னாள் ஸ்டுடியோ உரிமையாளர் விஜயராமன் கைது

மயிலாடுதுறையில் திமுக கட்சி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட முன்னாள் ஸ்டுடியோ உரிமையாளர் விஜயராமன் என்பவர் கைது. திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மாசிலாமணி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், ஆபாசமாக பதிவிடுதல், சட்டம் ஒழுங்கை சீரழிப்பது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விஜயராமனை கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via