தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு ரயில் பயணிகளின் வேண்டுகோள்

பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து காலையில் செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை 06.50 மணிக்கு வந்து விடுகிறது .ஆனால் எல்லா நாட்களும் அதை தென்காசியில் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் வரும் வரை 20 நிமிடம் வரை நிறுத்தி வைக்கிறார்கள்.. இதனால் பொதிகை ரயிலில் செங்கோட்டைக்கு வருகின்ற பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .
அதனால் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வந்த பின்பு செங்கோட்டை மயிலாடுதுறை வண்டி புறப்பட்டால் சரியாக இருக்கும்.. பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகும் அதை 20 நிமிடம் தென்காசியில் நிறுத்தி வைப்பது சரியாகாது... ஆதலால் பொதிகை ரயில் செங்கோட்டைக்கு வந்தவுடன் செங்கோட்டை - மயிலாடுதுறை வண்டி புறப்பட வேண்டும். ரயில் பயணிகளின் வேண்டுகோள்.
Tags : தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு ரயில் பயணிகளின் வேண்டுகோள்