மதுரை விமான நிலையம் விரிவாக்கம் போராட்டம் நடத்த அழைப்பு-போலீசார் குவிப்பு.
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து 15 நாளாக சின்ன உடைப்பு மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் மீள்குடி அமர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீதிமன்றத்தில் கிராம மக்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.இந்த போராட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் ஆதரவை சின்ன உடைப்பு மக்கள் திரட்டிய நிலையில் இன்று மதுரை மாவட்டம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக போராட்டக் குழுதெரிவித்துள்ளதால் ஏராளமான போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பு உருவாகியுள்ளது.
Tags : மதுரை விமான நிலையம் விரிவாக்கம் போராட்டம் நடத்த அழைப்பு-போலீசார் குவிப்பு.