அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 64 லட்சம் மோசடி

by Editor / 07-06-2025 03:04:00pm
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 64 லட்சம்  மோசடி

கோவை மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி நியமன ஆணை கொடுத்து ரூ. 64 லட்சம் மோசடி செய்த வழக்கில், தி. மு. க கவுன்சிலரின் கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

கௌதம் குமார் என்ற இன்ஜினியரிடம், தனது மனைவி வத்சலா தேவி, பிரகாஷின் மனைவி ரேகா மற்றும் சரவணகுமாருடன் சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக நம்பவைத்து பணம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு போலி ஆணை, மத்திய-மாநில அரசு சின்னங்களுடன் வழங்கப்பட்டது. பணியிட மாற்றத்துக்காக கூடுதல் ரூ. 5 லட்சம் பெற்றபோதும் வேலை அமையாததால், கௌதம் குமார் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். 

கவுன்சிலர் வத்சலா தேவி, ரேகா, சரவணகுமார் ஆகியோர் தலைமறைவில் உள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via