இந்தியா என்னையும் எங்களது நாட்டையும் நூறு சதவீதம் நம்பலாம்- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினார்
டெல்லி அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரத்தின் 250 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியா என்னையும் எங்களது நாட்டையும் நூறு சதவீதம் நம்பலாம் என்றும் இந்தியாவுக்கு எப்போது என்ன உதவி தேவை என்றாலும் வாசிங்கனை தொடர்பு கொள்ளலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது தனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளதாகவும் தான் அவரின் மிகப்பெரிய விசிறி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு நாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள தேக்க சூழலை நீக்கி இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவு உத்தரவை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். எரிசக்தி பாதுகாப்பு வர்த்தகம் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொழில்நுட்பம் மற்றும் விசா நடைமுறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர் இந்திய பயணத்தின் தொடக்கமாக கொல்கத்தா அன்னை தெரசா இல்லத்தில் ஆரம்பித்து டெல்லி ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய நான்கு நாள் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திங்கட்கிழமை என்று டெல்லியில் நடைபெறும் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.
Tags :



















