பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்.. 3 மாணவர்கள் காயம்

திருச்செந்தூர் மாவட்டம் அருகே பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சேதுக்குவாய்த்தான் பகுதியில் தனியார் பள்ளி வேனும், அரசுப் பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில், 3 மாணவர்கள் காயமடைந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :