குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரி வருகை

by Staff / 18-03-2023 12:46:28pm
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரி வருகை

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்துள்ள குடியரசுத் தலைவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து தனிப்படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார். பின்னர் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அங்கு சிறிது நேரம் கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதையொட்டி கன்னியாகுமரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, நேற்று காலை 11 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

 

Tags :

Share via

More stories