திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு : 300பேருந்து இயக்கம்.

by Editor / 05-12-2024 05:15:32pm
திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு : 300பேருந்து இயக்கம்.

திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழா 13.12.2024 அன்று நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை போக்குவரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும்  சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு இயக்கப்படுகிறது.

12.12.2024 முதல் 15.12.2024 வரை 300 பேருந்துகளும், பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் அறிவிப்பு.
 

 

Tags : திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு : 300பேருந்து இயக்கம்.

Share via