24-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டத் தொடர்
திமுக அரசு புதிதாக பதவியேற்ற பிறகு, முதல் முறையாகத் தொடங்கியிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.
சட்டப் பேரவைத் தோதலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார்.
ஆளுநா் உரை நிறைவடைந்ததும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வியாழக்கிழமை (ஜூன் 24) வரை கூட்டத் தொடா் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிறகு, ஜூன் 24-ஆம் தேதி ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரையாற்றுகிறார்.
Tags :