வரலாற்றில்..... இன்று 09 டிசம்பர் 2023-சனி

by Editor / 09-12-2023 08:56:19am
வரலாற்றில்..... இன்று 09 டிசம்பர் 2023-சனி

1425 : பெல்ஜியத்தில் லியூவென் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் நிறுவப் பட்டது.

1582 : பிரான்ஸில் கிரிகோரியன் நாட்காட்டி
அறிமுகப்படுத்தப்பட்டது.

1793 : நியூயார்க் நகரின் முதலாவது நாளிதழ் தி அமெரிக்கன் மினெர்வா வெளியிடப்பட்டது.

1828 : இலங்கையில் கண்டி வீதி சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது.

1835 : டெக்சாஸ் ராணுவம் சான் அன்டோனியோ நகரைக் கைப்பற்றியது.

1851 : வட அமெரிக்காவில் முதல் ஒய்எம்சிஏ நிறுவப்பட்டது.

1898 : கல்கத்தாவில் பேலூர் மடம் திறந்து வைக்கப்பட்டது.

1905 : பிரான்ஸில் அரசையும் கிறிஸ்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

1908 : ஜெர்மனி 13 வயதுக்குட்பட்டவர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை இயற்றியது.

1911 : அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் சுரங்க வெடிப்பில் 84 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1914 : உலகின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் HMS ஆர்க் ராயல் மிதக்க விடப்பட்டது.

1917 : முதலாம் உலகப் போர் :- பிரிட்டன் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றியது.

1922 : போலந்தின் முதல் ஜனாதிபதியாக கேப்ரியல் 
நருடோவிச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1924 : நெதர்லந்து - ஹங்கேரி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

1937 : இரண்டாம் சீன- ஜப்பான் போர்:- ஜப்பான் படைகள் சீன நகரான நான்கின் நகரைத் தாக்கின.

1940 : இரண்டாம் உலகப்போர்:- பிரிட்டன் மற்றும் இந்தியப் படைகள் இத்தாலிப் படையினரை எகிப்தில் தாக்கினர்.

1941 : இரண்டாம் உலகப் போர் :- சீனக் குடியரசு, கியூபா, பிலிப்பைன்ஸ் ஆகியன ஜெர்மனி, ஜப்பான் மீது போரை அறிவித்தன.

1946 : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுத இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதன்முறையாக கூடியது.

1948 : இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை ஐநா அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1953 : நியூயார்க்கில் ஜெனரல் எலக்ட்ரிக் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது.

1956 : கனடாவின் விமானம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விழுந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.

1958 : ஜான்பிர்ச் சொசைட்டி அமெரிக்காவில் நிறுவப்பட்டது.

1960 : பிரிட்டனில் குறைந்த மதிப்பு நாணயமான 
பார்த்திங் புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டது.

1961 : பிரிட்டனிடமிருந்து டங்கனிக்கா (தான்சானியா) விடுதலை பெற்றது.

1962 : அரிசோனாவில் பெட்ரிஃபைட் வன தேசியப் பூங்கா நிறுவப்பட்டது.

1971 : இந்திய - பாகிஸ்தான் போர் :- பாகிஸ்தானின் பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படையினரைத் தரையிறக்கியது.

1979 : பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

1986 : இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை 
எரித்ததற்காக திமுக தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1987 : இஸ்ரேல் பாலஸ்தீனப்  பிணக்கு :- முதலாவது  
பாலஸ்தீன எழுச்சி காசாக் கரை, மேற்குக் கரைப் பகுதிகளில் ஆரம்பமானது.

1988 : அயர்லாந்தின் ஸ்லிகோவில் மைக்கேல் வியூஸ் பாலம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1992 : சார்லஸ்-டயானா இருவரது பிரிவினை அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரை இறங்கின.

2003 : மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
பலர் காயமடைந்தனர்.

2006 : மாஸ்கோவில் மறுவாழ்வு மையத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 45 பெண்கள் உயிரிழந்தனர்.

2016 : வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்தியத் தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர்.
177 பேர் காயமடைந்தனர்.

 

Tags : வரலாற்றில் இன்று 09 டிசம்பர் 2023-சனி

Share via