சிறுமி வன்கொடுமை வழக்கு.. தேசிய மகளிர் ஆணையத்துக்கு கடிதம்
திருவள்ளூர்: கும்மிடிபூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி தேசிய மகளிர் ஆணையத்துக்கு அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “2022 முதல் 2025 வரை நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். கும்மிடிபூண்டி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Tags :



















