திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

by Editor / 17-03-2025 02:02:36pm
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

தமிழ்நாடு அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவர் மீதும் தேர்தல் விதிமீறல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via