அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைத்திருப்ப தீர்மானமா? - முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கேள்வி

by Editor / 17-03-2025 01:53:07pm
அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைத்திருப்ப தீர்மானமா? - முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பத்தை திசைத்திருப்ப நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாவதத்தில் உரையாற்றிய முதலமைச்சர், அரசு மீது குற்றம், குறை கூற வாய்ப்பில்லாததால் இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்துள்ளனரா? என்பது பற்றி நாம் பேச வேண்டாம், வெளியே உள்ளவர்கள் விவாதிக்கட்டும். இந்த தீர்மானம் கொண்டு வந்ததற்காக எதிர்காலத்தில் உங்களின் மனசாட்சி உறுத்தும் என்றார்.

 

Tags :

Share via