மதுரை,மதுராந்தகத்தில் கனமழை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது கோடை முடிந்த பிறகும் வெப்பம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இடி மின்னல்களுடன் கன மழை பெய்தது.ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக மதுராந்தகம் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை கேகே நகர், மாட்டுத்தாவணி, அண்ணா நகர், தெப்பக்குளம் தல்லாகுளம் கோரிப்பாளையம், ரிசர்வ்லைன், புதூர், தபால்தந்திநகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதே போன்று புறநகர் பகுதிகளான அலங்காநல்லூர், சோழவந்தான், கருப்பாயூரணி, ஒத்தக்கடை,
சிலைமான், விமான நிலையம், உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
Tags : மதுரை,மதுராந்தகத்தில் கனமழை