முல்லைப் பெரியாறு அணையில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட 4 அமைச்சர்கள் ஆய்வு!

by Editor / 05-11-2021 09:19:48pm
முல்லைப் பெரியாறு அணையில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட 4 அமைச்சர்கள் ஆய்வு!

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு 11.30 மணிக்கு சென்றார்.  அங்கிருந்து படகில் பயணம் செய்து  முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றுள்ளார்.


அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  உணவுத்துறை அமைச்சர்  அர.சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சா் மூர்த்தி, எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், மதுரை வடக்கு தளபதி, சோழவந்தான் வெங்கடேஷ், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.அமைச்சர் துறை முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும் - ஓ பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை. 80 வயதிலும் நான் நேரில்சென்று ஆய்வு  செய்துள்ளேன்.10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணையை யாரும் வந்து ஆய்வு செய்ததில்லை.கேரள அரசும் - தமிழ்நாடு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும். பிரனாயி விஜயன் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்-என்று  அமைச்சர் துரைமுருகன். செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags :

Share via