நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு, மாதாந்திர விலையாக கிலாே ஒன்றுக்கு 18 ரூபாய் 72 காசு விலை நிர்ணயம்.
நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஒவ்வொரு மாதம் துவக்கத்தில் விலை நிர்ணயம் செய்து தேயிலை வாரியம் அறிவிப்பு வெளியிடும், அதன்படி ஆகஸ்ட் மாதம் பச்சை தேயிலையை கொள்முதல் செய்த தேயிலை தொழிற்சாலைகள், குறைந்தபட்ச விலையாக செப்டம்பர் மாதம் கிலோ ஒன்றுக்கு 18ரூபாய் 72 காசுகள் விலை வழங்க வேண்டும் என்று, இந்திய தேயிலை வாரியம் தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ளது,
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியார் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். இதற்கான விலை நிர்ணயத்தை தேயிலை வாரியம் மாத துவக்கத்தில் வெளியிடும், அதன்படி ஆகஸ்ட் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 72 காசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது, இந்த விலையினை உரிய முறையில் வழங்க வேண்டும், என்றும் இதனை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என தேயிலை வாரிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags : நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு, மாதாந்திர விலையாக கிலாே ஒன்றுக்கு 18 ரூபாய் 72 காசு விலை நிர்ணயம்.